பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிப்பு; விரைவில் தமிழகம் வருமா?

பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிப்பு; விரைவில் தமிழகம் வருமா?



plastic wastage in reproduct petrol prance

பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வியந்திரம் தமிழகம் வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு பதிலாக பழைய முறைப்படி வாழை இலையை பயன்படுத்த பல உணவகங்கள் துவங்கிவிட்டன. குறிப்பாக சென்னையில் பாணி பூரி, காளான் விற்பனை செய்யும் சில சிறிய வகை கடைகளில் கூட வாழை இலைகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

வரும் ஜனவரி 1 முதல் தமிழக அரசின் உத்தரவை மீறி, பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாக இருப்பதாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

plastic isu

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் காஸ்டேல் என்ற விஞ்ஞானி வடிவமைத்துள்ள அந்த இயந்திரத்தில், நாம் கழிவாக பார்க்கும் பிளாஸ்டிக்கை அரைத்து, துகள்களாக மாற்றி திரவமாக்க முடியும். அந்த திரவ பொருளில் 65% டீசலும், 18 சதவீதம் பெட்ரோல் இருப்பது தெரியவந்துள்ளது. 

இவர் கண்டுபிடித்துள்ள முறையில் பிளாஸ்டிக்கை பெட்ரோல், டீசல் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதால், வளர்ந்து வரும் நாடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு, கழிவாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்த வழிவகுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்கிற்கு  தடைவிதிக்கப்பட்டுள்ள  தமிழகத்திற்கு இவ்வியந்திரம் வர நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால்  பேருதவியாக இருக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.