உலகம்

பூங்காவில் அடுத்தடுத்ததாக உயிரிழந்த மான்கள்.! வயிற்றின் உள்ளே இருந்ததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!!

Summary:

plastic found in dead deer in japan park

ஜப்பானில் அமைந்துள்ள பெரிய பூங்காக்களில் ஒன்று நரா பூங்கா. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இந்த பூங்காவில் மான்கள் அதிகளவில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மான்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து கொண்டே வந்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை சுமார் 18 மான்கள் உயிரிழந்துள்ளது.

 இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மான்கள் பாதுகாப்பு அறக்கட்டளை இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.மேலும் உயிரிழந்த மான்களை பிரேத பரிசோதனை செய்த  நிலையில் அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

 பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவரும் உணவுகளை சாப்பிட்டு விட்டு பைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனை மான்கள் விழுங்கும் சூழல் உருவாகிறது. இதனாலேயே உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. 

இதனை தொடர்ந்து பூங்காவிற்கு வருபவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்களை பயன்படுத்த கூடாது எனவும்,  பிளாஸ்டிக் கழிவுகளை ஊழியர்கள் உடனே அகற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 


Advertisement