
pigs drink liquor in super market
தற்காலத்தில் பண்டிகைகாலங்கள், திருமண நிகழ்ச்சிகள் என அனைத்து விழாக்களிலும் மது பிடிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. மேலும் மது அருந்துதல் என்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என எவ்வளவோ விளம்பரங்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் வெளிவந்தாலும் இவ்வழக்கம் மாறாத ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த 3 பன்றிகள், மோப்பம் பிடித்து சென்று அங்கிருந்த மதுபாட்டில்களை கீழே தள்ளிவிட்டு, மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் டயுமண்ட் நகரத்தில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் 3 பன்றிகள் நுழைந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அதனை வெளியே விடாமல் அந்த பன்றிகள் என்ன செய்கிறது என வேடிக்கை பார்த்துள்ளனர். அப்பொழுது பன்றிகள் அங்கிருந்த ஒவ்வொரு பொருளாக மோப்பம் பிடித்தவாறே உள்ளே சென்றுள்ளது.
பின்னர் அங்கிருந்த மதுபாட்டிலை மோப்பம் பிடித்து அதனை கீழே தள்ளி உடைத்துள்ளது. பின்னர் கீழே சிந்திய மதுவை ரசித்து குடிக்க துவங்கியது. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
Advertisement
Advertisement