BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அதிவேக பயணத்தால் சோகம்; பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் பலி.!
பெரு நாட்டில் உள்ள த்யாம்பமா நகரில் இருந்து, குச்வா நகர் நோக்கி பேருந்து ஒன்று 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.
இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் வழியே சென்ற நிலயில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்தவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் அதிவேக பயணமே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.