ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது Pepsico, Coca-Cola நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது Pepsico, Coca-Cola நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Pepsico and Coca Cola Announce Drop Business to Russia

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் தங்களின் வணிகத்தை ரஷியாவுடன் நிறுத்துவதாக பெப்சி மற்றும் கோக கோலா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ரஷியா - உக்ரைன் இடையே போர் 12 ஆவது நாளை கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் ரஷியாவுடன் இனைய வேண்டும் என்ற முனைப்புடன் பல்முனை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அரசும் தனது நாட்டினை காப்பாற்ற தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து இராணுவ தளவாடங்களை வாங்கி போரிட்டு வருகிறது.

Peopsico

ரஷியாவின் படையெடுப்பால் அதன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்த நிலையில், உலகளவில் அதிக தடைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக ரஷியா வந்துள்ளது. நேற்று இரவு ரஷியாவில் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கவும் தடை விதிக்கப்பட்டன.

Peopsico

இந்நிலையில், கோககோலா நிறுவனம் ரஷியாவில் தனது வணிகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் நடைபெற்ற துயர நிகழ்வு மனசாட்சியற்றது என்றும் தெரிவித்துள்ள கோககோலா, உக்ரைன் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனைப்போல பெப்சி நிறுவனமும் தனது வணிகத்தை ரஷியாவுடன் முடித்துக்கொண்டுள்ளது என பெப்சிகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.