உலகம் சினிமா

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்துகொள்ள, நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா! பகிரும் ரசிகர்கள்!

Summary:

parthiban tweet about coronovirus

சீனாவில் தற்போது கொரனோ வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் சீனாவின் வுஹான் நகரில் பரவத்துவங்கிய இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 106 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் 5000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ்தொற்று ஏற்படாமல் இருக்க பலரும் பலவிதமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், பிரபல இயக்குனருமான பார்த்திபன் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துகொள்வதற்காக மருத்துவர் ஒருவர் வெளியிட்ட சித்த, ஆயுர்வேத வைத்திய குறிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து  பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement