உலகம் லைப் ஸ்டைல்

ஆஹா..! ஆங்கில பாடலை அப்படியே அழகா பாடும் கிளி..! வைரல் வீடியோ காட்சி.!

Summary:

Parrot sings Beyonce song video leaves people amazed

கிளி ஒன்று மிகவும் அழகாக ஆங்கில பாடல் ஒன்றே பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பொதுவாக சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அதற்கு சான்றாக பல இடங்களில் உரிமையாளர் கூறுவதை அப்படியே கேட்டு திருப்பி சொல்லும் கிளிகளை நாம் பார்த்திருப்போம். தற்போது கிளி ஒன்று ஆங்கிலப் பாடலை பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைராலகி வருகிறது.

இங்கிலாந்தின் லிங்கன்ஷைர் வனவிலங்கு பூங்காவைச் சேர்ந்த ஒரு கிளி அதன் அற்புதமான பாடும் திறனுடன் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பூங்காவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில், கிளிப் பியோனஸின் "இஃப் ஐ வர் எ பாய்" என்ற ஹிட் பாடலை பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கிளியின் சரியான சுருதி மற்றும் அதன் பாடும் முறை வீடியோவை மிகவும் சுவாரஸ்யமாக பார்க்க வைக்கிறது.


Advertisement