பாவம் அந்த பிள்ளைகள்.! பாதாள அறை, பலநாள் பட்டினி..! பெற்ற பிள்ளைகளை அடைத்துவைத்து கொடுமை படுத்திய பெற்றோர்.

பாவம் அந்த பிள்ளைகள்.! பாதாள அறை, பலநாள் பட்டினி..! பெற்ற பிள்ளைகளை அடைத்துவைத்து கொடுமை படுத்திய பெற்றோர்.


Parents not gave food to 5 children in Soorich

பெற்ற பிள்ளைகளை பல ஆண்டுகளாக பட்டினி போட்டு பூமிக்கு அடியில் அடைத்து வைத்த பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ளது சூரிச் என்ற நகரம். இந்த நகரத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவர் தங்களுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்து பிள்ளைகளை பல ஆண்டுகளாக பூமிக்கு அடியில் அடைத்து வைத்து அவர்களுக்கு சரியான உணவு கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் எப்படியோ வெளியுலகத்திற்கு தெரிய வரவே போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த கொடுமைக்கு காரணம் நான் இல்லை எனது கணவர் தான் என மனைவியும், நான் இல்லை எனது மனைவிதான் என கணவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனை அடுத்து நடந்த விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக கணவருக்கு பாதிநான்கறை ஆண்டுகள் சிறை தண்டனையும், மனைவிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட குழந்தைகள் படித்து வந்த பள்ளி நிர்வாகம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து புகார் கூறியும், அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரிக்காத நிலையில் அந்த அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.