தெஹ்ரீக்-இ-தலிபான் - பாக். இராணுவம் மோதல்.. 4 பாக். இராணுவத்தினர் பலி.!

தெஹ்ரீக்-இ-தலிபான் - பாக். இராணுவம் மோதல்.. 4 பாக். இராணுவத்தினர் பலி.!


Pakistan Tehreek e Taliban Pak Army Fight 4 Soldiers Died

பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புக்கும், இராணுவத்திற்கும் இடையே கடந்த நவ. மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதனால் வன்முறைகள், உயிரிழப்புகள் குறைய தொடங்கிய நிலையில், உடன்படிக்கை விதிமுறையை அரசு மீறிவிட்டதாக கூறி தலிபான் இயக்கம் உடன்படிக்கையை மீண்டும் திரும்ப பெற்றது. 

மேலும், அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், தாக்குதலும் நடந்தப்பட்டது. இதனால் தாலிபான்களை தேடி அழிக்கும் வேட்டையில் அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் மிரலி அலி நகரம் உள்ளது. 

Pakistan

இந்த நகரில் தலிபான்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் - தலிபான்கள் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்த நிலையில், தலிபான்களின் தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ஒரேயொரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.