துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்; காவலர் அதிர்ச்சி செயல்.. பகீர் வீடியோ வைரல்.!



Pakistan Punjab police constable rapes elderly woman

 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் முகம்மது அஹ்மத். இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஒதுக்குபுறமான பகுதிக்கு, பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்றுள்ளார்.

பின் பெண்ணை பலவந்தப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். பெண்மணியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் சென்றபோது, சம்பவ இடத்தில் நடந்த விஷயம் அம்பலமானது.

இதையும் படிங்க: கிளீனிக்கில் நாயுடன் விளையாட்டு; திடீரென பாய்ந்து தாக்கிய பகீர் சம்பவம்.!

Pakistan

பலாத்காரம் & துப்பாக்கிசூடு, அதிகார துஷ்ப்ரயோகம்

இதனையடுத்து, நிகழ்வை அவர் வீடியோ எடுத்தபடி நியாயம் கேட்க, காவலர் அவரின் மீது துப்பாக்கிசூடு நடத்தி இருக்கிறார். இதனால் அவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச்சத்தம் கேட்டு வந்த கிராமத்தினர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், காவலருக்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: உக்ரைனுக்கு பேரிடி.. கைவிரித்த ட்ரம்ப்? அழைப்பு விடுத்த புதின்.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.!