கிளீனிக்கில் நாயுடன் விளையாட்டு; திடீரென பாய்ந்து தாக்கிய பகீர் சம்பவம்.!



a Pet Dog Attack Man 

 

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், எப்போதும் நம்முடன் அன்பு பாராட்டி மகிழும். நமது செயல்பாடுகளை கவனித்து, ஒருசில நேரம் நாம் சோர்வுடன் இருந்தால், நம்மை விளையாட அழைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதேநேரத்தில், வெளிநாடுகளில் ஹைபிரிட் முறையில் நாய்கள் சில நேரம் மூர்கத்தனமாகி மனிதர்களையும், சிறு குழந்தைகளையும் தாக்கிய பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.

இதையும் படிங்க: உக்ரைனுக்கு பேரிடி.. கைவிரித்த ட்ரம்ப்? அழைப்பு விடுத்த புதின்.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.!

இந்நிலையில், கிளீனிக் ஒன்றில் பிப்.11 அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், நாய் ஒன்று ஒருவரை கடுமையாக தாக்கியது. முதலில் அமைதியாக இருந்த நாய், திடீரென மூர்க்கமாகி அவரின் கைகளை இறுக பற்றிக்கொண்டு கடித்தது.

நாயின் பிடியில் இருந்து எப்படியோ நபர் தப்பிவிட்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 55 பயணிகள் பரிதாப மரணம்.!