410 சிறுவர்கள், 90 பெரியவர்கள். ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் நடுநடுங்க வைத்த சம்பவம்!

410 சிறுவர்கள், 90 பெரியவர்கள். ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் நடுநடுங்க வைத்த சம்பவம்!



Pakishthani doctor spread HIV to 500 people

பாக்கிஸ்த்தானில் ஒருகுறிப்பிட பகுதியில் 500 பேருக்கு HIV நோய் இருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தெற்கே உள்ள லார்கனா மாவட்டத்தில் உள்ள பகுதியில் அலி ராஸா என்ற சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிறுவனுக்கு காய்ச்சலுக்கான மருந்து கொடுத்தும் காய்ச்சல் நிக்கவில்லை. இதனிடையே அந்த பகுதியில் HIV இருப்பதாக பரவலாக பேசப்பட்ட நிலையில் சிறுவனின் பெற்றோர் அவனை அருகில் இருந்த உயர்தர மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர்.

Pakistan

பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் கூறிய தகவல் சிறுவனின் குடும்பத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது. காரணம் அந்த சிறுவனுக்கும் HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அலி தங்கியிருந்த பகுதியில் சோதித்து பார்த்ததில் சுமார் 410 சிறுவர்கள் உள்பட 500 பேருக்கு, எச்ஐவி இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முசாஃபர் காங்காரோ என்ற டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவர்தான், முதன்முதலில் லார்கனா பகுதியில் எச்ஐவி நோயை பரப்பியவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும், அரசாங்கத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Pakistan