தடுமாறும் வயதிலும் மனம் தளராத முதியவர்....மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த வீடியோ காட்சி...

தடுமாறும் வயதிலும் மனம் தளராத முதியவர்....மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த வீடியோ காட்சி...


Old man fed a dog

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதுடன், பார்ப்போர் மனதிற்கு வருத்தத்தையும் ஏற்படுத்தும். மேலும் அவ்வப்போது விலங்கு மற்றும் பறவைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் சிலரது வீடியோவும் உலா வரும்.

அந்தவகையில் தெருவில் ஆதரவற்று திரியும் தெரு நாய் ஒன்றுக்கு ஏழை முதியவர் ஒருவர் உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது. பொதுவாக தெரு நாய்களை யாரும் கண்டு கொள்வதில்லை, அவை சாலையோரங்களில் கிடைக்கும் ஏதேதோ வீணான உணவு பண்டங்களை அறைவயிறு தின்றுவிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அந்த தெரு நாய்க்கு  முதியவர் ஒருவர் உணவளித்து உதவும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரும்  அந்த  முதியவரை  பாராட்டி  வருகின்றனர்.