உலகம்

வடகொரியா அதிபரின் கதை முடிந்ததா..? அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்தி வெளியிடும் பிரபல தொலைக்காட்சி.!

Summary:

North Korea president health current status

மற்ற நாடுகளுக்கு பயம் காட்டிவரும் அமெரிக்காவிற்க்கே பயம் காட்டியவர் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக கிம் ஜாங் உன் உலா வருகிறார்.

காரணம், கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ன ஆனார் என எந்த தகவல்களும் வெளியே தெரியவில்லை. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்களும் எந்த தகவல்களையும் வெளியே கூறவில்லை. இதைய அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிம் ஜாங் உன் ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகிறது. குறிப்பாக சிங்கப்பூரை சேர்ந்த ஆன்லைன் தொலைக்காட்சி ஒன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் உடலை வெளியிட்டு அவர் இறந்துவிட்டதாக செய்தி ஒளிபரபரப்பி வருகிறது.

ஆனால், அதிபர் கிம் ஜாங் இறந்தது குறித்து அண்டை நாடான தென் கொரியாவோ அல்லது அமெரிக்காவோ இதுவரை எந்த உறுதியான தகவல்களையும் கூறவில்லை. அதேநேரம், அதிபர் இறந்துவிட்டதாக வெளியாகும் தகவலை வட கொரியா உறுதிப்படுத்தவும் இல்லை, அதை மறுக்கவும் இல்லை. இதனால் மக்கள் மிகவும் குழம்பி போய் உள்ளனர்.


Advertisement