கடும் உணவு பஞ்சம்..! நாய் கறிக்கு கூட திண்டாட்டம்.! வீட்டில் இருக்கும் நாய்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கிம் ஜாங் உத்தரவு!!!

கடும் உணவு பஞ்சம்..! நாய் கறிக்கு கூட திண்டாட்டம்.! வீட்டில் இருக்கும் நாய்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கிம் ஜாங் உத்தரவு!!!



North korea ordered to hand over dogs for meat

வடகொரியா நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு பஞ்சத்தால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள்  உள்ளிட்ட செல்ல பிராணிகளை இறைச்சிக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கிம் ஜாங் உன்னின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் செயல்பட்டுவருகிறது வடகொரியா. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அந்நாட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்படுவதால் அந்நாட்டு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோக கொரோனா காரணமாக சீனாவுடனான வர்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

North Korea

இதனால் வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பெரும்பாலானோர் இரண்டு வேலை உணவு கூட கிடைக்காமல் தவித்துவருகின்றனர். மேலும் சிலர் சோளம் போன்றவற்றை உணவாக உண்டுவருவதாகவும், பலர் பட்டினி கிடப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோக அந்நாட்டில் பலரும் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியாவில் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சத்தை போக்க வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அரசாங்கத்திடம் இறைச்சிக்காக ஒப்படைக்குமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.