Nobel Prize 2023 : இலக்கியத்திற்க்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

Nobel Prize 2023 : இலக்கியத்திற்க்கான நோபல் பரிசு அறிவிப்பு..!



nobel-prize-2023-nobel-prize-for-literature-announcemen

ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்குவது வழக்கம். அதே போல 2023 ஆண்டுக்கான நோபல் பரிசு எந்தெந்த துறைகளில் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதை ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசை யார் வென்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளரான   ஜான் ஃபோஸ்ஸே (Jon Fosse) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய புதுமையான உரைநடை "சொல்ல முடியாதவற்றிற்கான குரல்" (voice to the unsayble) புத்தகத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஜான் ஃபோஸ்ஸே கவிதை,கட்டுரை, நாடக வசனம், குழந்தைகள் காவியம், புத்தகங்கள் எழுதுவது போன்ற பன்முக திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.