துணியால் சுற்றப்பட்டு பிறந்த சில நிமிடங்களில் வீசப்பட்ட பிஞ்சு சிசு! உடலில் வீசிய அந்த ஒரு வாசனை... பகீர் சம்பவம்!!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மது வாசனை வீசும் நிலையில் கிராமத்தில் தனியாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வி.ஆர். பஞ்சாரா கிராமத்தில் துணியால் சுற்றப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்த மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது.
கிராம மக்கள் அளித்த தகவலால் மீட்கப்பட்ட குழந்தை
கம்மம் தொகுதிக்குட்பட்ட ரகுநாதபாலம் மண்டலத்தில் உள்ள வி.ஆர். பஞ்சாரா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை அழுதுகொண்டிருந்ததை கிராம மக்கள் கண்டுள்ளனர். குழந்தை பிறந்து சிறிது நேரமே ஆகியிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், அவர்கள் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி! ரூ.1.5 லட்சம் நகை அபேஸ்... அம்பலமான நூதன மோசடி..!!!
அரசு மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பு
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், ஆஷா பணியாளரின் உதவியுடன் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் முதலுதவி அளிப்பதற்காகவும், உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காகவும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையின் உடல்நிலையைக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார்?
பிறந்த பச்சிளம் குழந்தையை அங்கு விட்டுச் சென்றது யார், எந்தச் சூழலில் இது நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் அடையாளம் மற்றும் குடும்பத்தினரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தையின் உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதையும் படிங்க: இப்படியா ஆகணும்? திருமணமாகி 3 மாதம் தான்... இளம் புதுமண தம்பதிக்கு டீ குடிக்கப் போன இடத்தில் காத்திருந்த மரணம்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!!