
New corono symptoms for children in Britannia
உலகம் முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸால் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். குழந்தைகளை இந்த வைரஸ் பெரிதாக தாக்குவது இல்லை என்று கூறப்பட்டாலும் ஆங்காங்கே சில பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுத்தான் வருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் கொரோனா தொடர்புடைய புதுவித அறிகுறியுடன் குழந்தைகள் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும் வருவதாக என்.ஹெச்.எஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை கடிதத்தில், கொரோனாவுடன் தொடர்புடைய அறி (COVID-19 related inflammatory syndrome) பிரித்தானிய குழந்தைகளிடம் அதிகரித்துவருகிறது கூறப்பட்டுள்ளது.
உடல் உள்ளுறுப்புகள் வீக்கம், காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். மருத்துவர்கள் இந்த மர்ம அறிகுறிகளை toxic shock syndrome மற்றும் Kawasaki என்னும் நோய்களுடன் ஒப்பிடுகின்றனர்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றே முடிவு வருவதால் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Advertisement
Advertisement