நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
நெல்லையில் பயங்கரம்... காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.!! 3 சிறுவர்கள் கைது.!!
நெல்லையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயல்வெளியில் புதைக்கப்பட்ட உடல்
திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள கண்டியப்பேரி விலக்கு பகுதியில் ரத்தக்கரை திட்டுத்திட்டாக இருப்பதாக பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் டவுன் காவல் துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர். ரத்தக்கரை படிந்திருந்த பகுதிகளில் மோப்ப நாய் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அருகே இருந்த வயல்வெளியில் இளைஞரின் உடல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

காதல் விவகாரத்தில் நடந்த படுகொலை
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் டவுன் செபஸ்தியர் கோவில் பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகன் ஆறுமுகம்(22) என தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்வதற்காக தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.!! பரிதாபமாக பலியான டிரைவர்.!!
கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள்
போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் காதலித்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 17 வயது சிறுவர்கள் 3 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய சுடலை(22) என்ற நபர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த காவல் துறையினரை போலீஸ் கமிஷனர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஜிம் மரணம்... பயிற்சியாளரால் பறி போன உயிர்.? இளைஞருக்கு நேர்ந்த சோக முடிவு.!!