உலகம்

வானத்தில் பறந்துகொண்டிருக்கும் போதே செத்து செத்து கீழே விழும் கிளிகள்..! புதுவித வைரஸ் தாக்குதலால் நடு நடுங்கும் ஆஸ்திரேலியா..!

Summary:

Mystery virus leaves hundreds of the birds dead in suburban

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், உலகம் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்குள் ஆஸ்திரேலியாவில் புதுவித வைரஸ் ஓன்று அந்நாட்டில்  கிளிகளை தாக்கிவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் கிளிகள் வானத்தில் பறந்துகொண்டிருந்தபோதே இறந்து கீழே விழுகிறது.

கிரிபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான பேராசிரியர் டேரிஸ் ஜோன்ஸ் என்பவர் இதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கிளிகள் தங்களுக்குள் அன்புசெலுத்தும்போதும், சண்டையிடும்போது இந்த வைரஸ் ஒரு கிளியிடம் இருந்து மற்றொரு கிளிக்கு பரவுவதாகவும், கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரலை தாக்குவதுபோல், இந்த வைரஸ் கிளிகளின் நுரையீரலை தாக்கி கிளிகளை மரணமடைய செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த புதுவித வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பதுகுறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடந்துவருகிறது.


Advertisement