
மிகவும் அரியவகை குருவி ஒன்றன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மிகவும் அரியவகை குருவி ஒன்றன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென் அமெரிக்க பகுதிகளில் காணப்படும் பறவை இனங்களில் கர்தினால் என்ற சிவப்புக்குருவியும் ஒன்று. இந்த குருவியானது கனடா, மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஐக்கிய அமெரிக்கா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக இந்தவகை குருவிகளானது ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண் குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது.
ஆனால் இந்த குருவி இனத்தில் மிகவும் அறியவகையாக 10 லட்சம் குருவிகளில் ஒரு குருவி மட்டும் ஆணும், பெண்ணும் கலந்ததுபோல இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது ஒருபாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். ஆனால் இந்த அரியவகை பறவையை காண்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த அரியவகை குருவியை அமெரிக்காவை சேர்ந்த பறவை ஆர்வலர் ஜேமி ஹில் என்பவர் கண்டுள்ளார். அமெரிக்கா கிராண்ட் வேலி பகுதியில் காணப்பட்ட இந்த அரியவகை குருவியை அவர் புகைப்படமாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
48 வருடங்களாக பறவைகள் குறித்து தான் ஆராய்ச்சி செய்துவருவதாகவும், இந்தவகை குருவியை இதுவரை தான் பார்த்ததே இல்லை. முதல் முறையாக இந்த குருவியை தான் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement