ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.! கொரோனோவால் அவர்களை நிரந்தரமாக பிரிந்த சம்பவம்.

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.! கொரோனோவால் அவர்களை நிரந்தரமாக பிரிந்த சம்பவம்.


mother-of-five-39-years-old-women-dies-of-coronavirus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு உயிர் இழப்புகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தனது ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக பிரிட்டனில் உயிர் இழந்துள்ளார். பிரிட்டனின் ஸ்லோ என்னும் பகுதியை சேர்ந்த லேபர் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் ஷப்னம் சாதிக். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

corono

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தனது பூர்விக நாடான பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக சென்றுவிட்டு 5 நாட்களில் பிரிட்டன் திரும்பியுள்ளார். இந்த குறுகிய காலத்தில் ஷப்னம் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ளார். மூச்சுவிட சிரமப்பட்டுவந்த ஷப்னம் கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமானதை அடுத்து சிகிச்சை பலனின்றி ஷப்னம் உயிர் இழந்துள்ளார். மொத்தம் 5 குழந்தைகளுக்கு தாயான ஷப்னத்தின் இந்த மறைவு அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.