உலகம் மருத்துவம்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்,.. பெல்ஜியம் அறிவிப்பு..!

Summary:

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்,.. பெல்ஜியம் அறிவிப்பு..!

பெல்ஜியம் அரசு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகள் பலவற்றில் 'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் தொற்று பரவி வருகிறது. கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 28 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருப்தாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பலியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருடன் நேரடியான அல்லது உடல்ரீதியிலான தொடர்பு கொண்டவர்கள், காய்ச்சலுக்கான அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், முதல் நாடாக பெல்ஜியம் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கியயுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அங்கு 4 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து, 21 நாள்கள் தனிமைப்படுத்தலைக் பெல்ஜியம் கட்டாயமாக்கியுள்ளது .

நாட்டில் குரங்கு காய்ச்சல் தீவிரம் அடையாமல் இருக்க பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement