அமேசான் பார்சல் வடிவில் வீட்டிற்கு வந்த சர்ப்ரைஸ்.. திறக்க முயன்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

அமேசான் பார்சல் வடிவில் வீட்டிற்கு வந்த சர்ப்ரைஸ்.. திறக்க முயன்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..


mom-send-birthday-cake-like-amazon-parcel-viral-photos

மகனின் பிறந்தநாளுக்கு அவரது தாயார் கொடுத்த வித்தியாசமான கிப்ட் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் கேன் வில்லியம்ஸ் என்பவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் அடிக்கடி பொருட்கள் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். எதெற்கெடுத்தாலும் அமேசானில் ஆர்டர் போடும் இவரின் பழக்கத்தை அவரது தாயார் கவனித்துள்ளார்.

இந்நிலையில் கேன் வில்லியம்சுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்துள்ளது. மகனின் பிறந்த நாளுக்கு, அவருக்கு சர்ப்ரைஸாக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவரது தாய், அதற்காக புது திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி, அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்டுகள் வரும் பார்சல் போலவே கேக் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

மேலும் அந்த கேக்கை எடுத்துச்சென்று தனது மகனிடம் அவர் கொடுத்துள்ளார். ஏதோ பார்சல் வந்துள்ளது என நினைத்து கேன் வில்லியம்ஸ் அந்த பார்சலை திறக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. அதன்பிறகுதான் அவருக்கு தெரிந்துள்ளது, இது கேக் என்று.

மிகவும் வித்தியாசமாக தனது தாயார் கொடுத்த கிப்டை பார்த்த கேன் வில்லியம்ஸ் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். மேலும், அந்த கேக்கை அவரது தாயார் புகைப்படம் எடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.