60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து அமெரிக்க அழகி பட்டம் வென்றவர் உயிரிழப்பு.!Miss USA 2019 Cheslie Krys died

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற "மிஸ் அமெரிக்கா" அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர் ஜாஸ்லி கிரிஸ்ட். 30 வயது நிரம்பிய இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், ஜாஸ்லி கிரிஸ்ட்  நியூயார்க் மாகாணத்தில்  60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது மாடியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜாஸ்லி கிரிஸ்ட் தான் வசித்துவந்த 60 மாடி கட்டிடத்தில் இருந்து கிழே குதித்து இன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜாஸ்லி கிரிஸ்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும் என பதிவிட்டுள்ளார். 

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற ஜாஸ்லி கிரிஸ்ட் 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஸ்லி கிரிஸ்ட் மறைவுக்கு நடப்பாண்டின் உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.