என் பெயருக்கு பின் இருக்கும் துராடி என்பதற்கு இதுதான் அர்த்தம்.! உண்மையை உடைத்த விஜய் டிவி தங்கமயிலு.!

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் கதாநாயகியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா துராடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த தொடரில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை
அதனைத் தொடர்ந்து நடிகை சரண்யா விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் ரன் என்ற தொடரிலும் நடித்தார். பின் சில காலங்கள் இடைவெளிக்குப் பிறகு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்தை திட்டி தீர்த்தவர்கள் தற்போது பாவம் என அனுதாபம் காட்டி வருகின்றனர்.
துராடி என்பதன் அர்த்தம்
இந்நிலையில் நடிகை சரண்யா துராடி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பேசிய அவர், என்னை பிற மாநிலத்தவர் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நான் பக்கா தமிழச்சி. எனது அப்பாவின் சொந்த ஊரு பாண்டிச்சேரி. என்னுடைய அம்மா பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். எனது பெயருக்கு பின் இருக்கும் "துராடி" என்ற பெயர் ஊரில் வணங்கப்படும் சிறு தெய்வத்தின் பெயர். நமது குலதெய்வத்தின் பெயரை அடையாளமாக வைத்துகொள்ள வேண்டும் என நினைத்து தெய்வத்தின் பெயரை தனது பெயரோடு இணைத்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.