பேரதிர்ச்சி.! 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து மிஸ் அமெரிக்க அழகி தற்கொலை! என்ன காரணம்!!

பேரதிர்ச்சி.! 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து மிஸ் அமெரிக்க அழகி தற்கொலை! என்ன காரணம்!!


Miss ameria commits suicide

மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2019 ஆம் ஆண்டு  ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட். 30 வயது நிறைந்த இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் 9வது மாடியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். செஸ்லி கிரிஸ்ட் கடைசியாக கட்டடத்தின் 29வது மாடியில் நின்றுகொண்டு இருந்துள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்துள்ளது. இதனால், அவர் 29வது மாடியில் இருந்தே கீழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Miss america

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, 'இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டு வரும்' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிஸ் அமெரிக்க அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.