உலகம்

ரகசிய கேமிரா வைத்து 2000 பெண்களின் அந்தரங்க பகுதிகளை வீடியோ எடுத்த இளைஞர்! அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

Summary:

Men arrested for taking photos of private parts using hidden camera

இன்று எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட் போன், கேமராக்கள்தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.

இந்தநிலையில், சிங்கப்பூரில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பள்ளியில் படிக்கும் பெண்கள் முதல், இளம் பெண்கள் வரை பலரை ரகசிய கேமிரா வைத்து படம் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Clarence Tang Jia மிங் என்னும் 26  வயாதான் சிங்கப்பூரை சேர்ந்த இளைஞரின் வழக்கு கடந்த வியாழக்கிழமை நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவர் மீது 45 வழக்குகள் பதியுவு செய்யப்பட்ட நிலையில் 2000 அதிகமான ஆபாச படங்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த இளைஞர் Sammyboy Forum என்ற குரூப்பில் இணைந்துள்ளார். அதில் தனக்காக தனியாக ஒரு அக்கவுண்டையும் ஓபன் செய்துள்ளார்.

அதாவது அதில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவை பகிரப்படும் எனவும், கிட்டத்தட்ட அது ஒரு ஆபாசதளம் போன்று தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதில் நண்பர் ஒருவரின் பழக்கம் கிடைத்துள்ளது. அப்போது அவரிடம் எப்படி பெண்களை ரகசியமாக படம் பிடிப்பது, போன்றவைகளை அந்த நபர் இவருக்கு சொல்லி கொடுத்துள்ளார்.

இதையடுத்து 2014-ஆம் ஆண்டு பெண்களை ரகசியமாக படம் பிடிக்கும் வேலையில் Clarence Tang Jia Ming ஈடுபட்டுள்ளார்.

அதாவது முக்கிய பெண்கள் ஆடை மாற்றும் கழிப்பறையின் கதவுகளில் இந்த ரகசிய கெமராக்களை பொருத்தியுள்ளார். அதிலும் அவர்களின் முகம் மற்றும் அந்தரங்க பகுதிகள் தெளிவாக தெரியும் படி கெமராவை பொருத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோவக்களை சரியான முறையில், தெளிவாக இருப்பதற்கு தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி, Sammyboy Forum என்ற குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

இப்படி பல வீடியோக்களை 2014-லிருந்து 2016 வரை செய்துள்ளார். இதில் பள்ளிச் சிறுமிகளின் வீடியோக்களும் இருந்துள்ளன. இந்த வீடியோக்கள் அப்படியே இணையதளங்களில் வைரலானதால், இந்த விவகாரம அரசிற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில் வீடிக்கள் அனைத்தும் Sammyboy Forum குரூப்பில் இருந்தே வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் Clarence Tang Jia Ming வீட்டை சோதனை மேற்கொண்டதில் கெமராவிற்கு பயன்படுத்தப்படும் ஏராளமான எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்துள்ளன.

அதிலும் அவர் வீட்டில் இருந்த ஹார்ட் டிஸ்க்களில் பெண்களை ரகசியமாக எடுத்த 2013 வீடியோக்கள் இருந்துள்ளன.

இவர் தான் இந்த குரூப்பின் ஐந்தாவது நபர் எனவும், இதற்கு முன்னர் இதே போன்று நான்கு பேர் Ong Yi Jie(27) Joel Chew Weichen(27) Shaun Lee(29) Ali V. P. Mohamed(46) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் Clarence Tang Jia Ming தற்போது $15,000 செலுத்தி பெய்ல் பெற்றுள்ளான், இது தொடர்பான வழக்கு மீண்டும் அடுத்தமாதம் 4-ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

பெண்கள் அதிகமாக வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் காபி ஷாப்பில் வைத்தே இந்த இளைஞன் அதிக அளவிலான படங்களை பிடித்துள்ளான்.

அதுமட்டுமின்றி தன் வீட்டிற்கு வரும் பெண் நண்பர்கள் கழிப்பறை பயன்படுத்தும் போது அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கமெராவை வைத்து படம் பிடித்துள்ளான்.


Advertisement