உலகம்

பெண் ஊழியருடன் ஏற்பட்ட தொடர்பு ! பறிபோனது சிஇஓ பதவி!

Summary:

McDonald’s CEO fired over relationship with employee


மெக்டொனால்டு நிறுவனத்தின் சிஇஓ அந்த நிறுவனத்தின் பெண் ஊழியருடன் நீடித்த தொடர்பால் வெளியேற்றப்பட்டதாக நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

புகழ்பெற்ற துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியருடன் ஏற்பட்ட தொடர்பால் தலைமைச் செயல் அதிகாரியின் பதவி பறிபோனது. மெக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் இருந்துள்ளார்.


அந்த நிறுவனத்தில் பதவியில் வகிப்பவர்கள், நிறுவன ஊழியருடன் காதல், சேர்ந்து வசிப்பது, திருமணம் செய்வது போன்ற எந்த தொடர்பையும் வைத்திருக்கக் கூடாது என்பது அந்த நிறுவனத்தின் விதிமுறை ஆகும். அதை மீறும் வகையில் பெண் ஊழியர் ஒருவருடன் ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் இணக்கமான தொடர்பில் இருப்பதாக தெரிய வந்தது. 

இந்நிலையில், விசாரணையில் ஊழியர் உடனான தொடர்பை உறுதிப்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மெக்டொனால்ட் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 


Advertisement