மீன்பிடிக்கும் தூண்டிலை வைத்து நகைக்கடையில் நெக்லஸை திருடும் பலே திருடன்.! வெளியானது சிசிடிவி காட்சிகள்.!



Man stealing in jewelry shop using fishing rod

ஆஸ்திரேலியா நாட்டில் நபர் ஒருவர் மீன்பிடிக்க பயன்படும் தூண்டிலை வைத்து நகைக்கடை ஒன்றில் நெக்லஸை திருடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் மீன் பிடிக்க பயன்படும் தூண்டிலை வைத்து நெக்லஸைத் திருடுகிறார்.

முதலில் நகைக்கடையின் கண்ணாடி ஜன்னலை உடைக்கும் அந்த திருடன்,அதன்பின்னர்  மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் தூண்டிலைப் பயன்படுத்தி, நெக்லஸை லாவகமாக வெளியே எடுக்கிறார். இந்த வீடியோவை விக்ட்டோரியா போலீசார் தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியியிட்டுள்ளனர்.