உலகம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

ஆசையாக ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர்.. வீட்டிற்கு வந்த பார்சலை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு ஐபோன் வடிவிலான டேபிள் அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் க

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு ஐபோன் வடிவிலான டேபிள் அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் கடும் வைரலாகிவருகிறது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐபோன் என்றால் அவ்வளவு ஆசை. எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருந்த அவருக்கு வலைத்தளம் ஒன்றில், மிக மிக குறைந்த விலைக்கு லேட்டஸ்ட் மாடல் ஐபோன் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்துள்ளது.

அந்த விளமபரத்தை பார்த்த அந்த இளைஞர் உடனே ஆர்டர் செய்துவிட்டார். இதனை அடுத்து எப்போது தான் ஆர்டர் செய்த ஐபோன் வரும் என காத்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த ஐபோன் தான் வந்துள்ளது என, ஆசையாக சென்று பார்சலை பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், அந்த பார்சல் அவரது உயரத்திற்கு இருந்துள்ளது. சரி உள்ளே என்னதான் இருக்கு என பார்த்த அவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக, ஐபோன் வடிவிலான டேபிள் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பின்னர்தான் அந்த இளைஞருக்கு தெரியவந்துள்ளது, தான் ஆர்டர் செய்தது ஐபோன் இல்லை என்றும், அது ஒரு ஐபோன் வடிவிலான டேபிள் என்றும். இந்த சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement