உலகம்

கொரோனா வைரஸ் பாதித்த பகுதியில் மர்ம நபர் கொண்டுவந்த மர்ம பெட்டி..! சல்யூட் அடித்த சீன போலீசார்..!

Summary:

Man leave 500 face mask in police station corono virus

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. சீனாவில் உள்ள வுகான் நகரத்தில் இருந்து முதல் முதலில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 132 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 6061 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமலும், முகத்தில் முகமூடி அணிந்தபடியும் நடமாடிவருகின்றனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் முகமூடி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் காவல் நிலையம் ஒன்றுக்குள் வந்த மர்ம நபர் தான் கொண்டுவந்த பெட்டிகளை காவல் நிலையத்தில் வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை விசாரிப்பதற்குள் அவர் அங்கிருந்து வேமகாம சென்றுவிட்டார்.

அவர் கொண்டுவந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது சுமார் 500 முக மூடிகள் அந்த பெட்டியில் இருந்துள்ளது. இதனை பார்த்து நெகிழ்ச்சியடைந்த போலீசார் தெருவில் நின்றபடி அவருக்கு ஒரு சல்யூட் அடித்தனர். பலன் எதிர்பாராமல் அந்த மர்மநபர் செய்த உதவிக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


Advertisement