உலகம் Covid-19

மனைவியை துடிக்க துடிக்க கொலைசெய்துவிட்டு கொரோனா மீது பழியை போட்ட கணவன்.! விசாரணையில் அம்பலமான உண்மை.

Summary:

Man killed wife and said she is isolation for corono

மனைவியை கொலைசெய்துவிட்டு கொரோனா மீது பழிபோட்ட கணவனை போலீசார் கைதுசெய்துள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்தவர் டேவிட் அந்தோணி. இவர் தனது மனைவி கிரெட்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் நண்பர்கள் மற்றும்  மனைவியின் உறவினர்கள் உட்பட அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

இருப்பினும் டேவிட்டின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட கிரெட்சனின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த போலீசார் கிரெட்சன் எந்த ஒரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து, டேவிட்டிடம் தீவிர விசாரணையில் இறங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் டேவிட் அந்தோணி அவரது மனைவியை கொலைசெய்தது தெரியவந்தது. மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு கொரோனா மீது பழியை போட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement