உலகம் லைப் ஸ்டைல்

காலை கடன் முடிக்க போன இடத்தில் இப்படியா!! கழிவறை உள்ளே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

காலை கடனை முடிப்பதற்காக கழிவறைக்குள் சென்ற நபர், அங்கிருந்த டாய்லெட்டில் இருந்த பாம்பை பார

காலை கடனை முடிப்பதற்காக கழிவறைக்குள் சென்ற நபர், அங்கிருந்த டாய்லெட்டில் இருந்த பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தாய்லாந்து நாட்டின் சாமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 45 வயதான சோமச்சாய். இவர் சம்பவத்தன்று காலை தனது வீட்டில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்திருந்தபோது, அடியில் இருந்து ஏதோ ஒன்று அவரை முட்டுவதுபோல் உணர்ந்துள்ளார்.

முதலில் ஏதோ பிரமை என நினைத்த அவர் மீண்டும் மீண்டும் ஏதோ முட்டுவது போல் உணர்ந்தபோது சட்டெனெ எழுந்து கழிவறையை பார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர் அமர்ந்திருந்த கழிவறைக்குள் பெரிய பாம்பு ஒன்று இருந்துள்ளது.

உடனே அவசர உதவி எண்ணிற்கு தொடர்புகொண்டு விவரத்தை கூறியுள்ளார். உடனே வரத்து வீட்டிற்கு வந்த வனத்துறையினர் சற்று காத்திருந்து அந்த பாம்பினை அங்கிருந்து பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், "இந்த பாம்பு மனிதர்களை கடிக்க கூடியது. சுமார் 8 அடி நீளம் இருந்த அந்த பாம்பு வனப்பகுதியில் இருந்து கழிவறை வழியாக உள்ளே வந்தித்திருக்கலாம்" என கூறியுள்ளனர்.


Advertisement