உலகம் லைப் ஸ்டைல்

கொஞ்ச நேரத்துல எல்லோருக்கும் ஆடி போச்சு.. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் காரை ஓடிச்சென்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்

Summary:

தாய்லாந்து நாட்டில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஓடுபாதையில் நபர் ஒருவர் கார் ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஓடுபாதையில் நபர் ஒருவர் கார் ஓட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான Bangkok கில் உள்ள Suvarnabhumi விமநிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானநிலையத்தில் உள்ள விமான ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மர்மநபர் ஒருவர் தனது காரை விமான ஓடுபாதையில், விமானத்திற்கு அருகில் ஓடினசென்றுள்ளார்.

இதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த காரை மடக்கிப்பிடித்து, அந்த காரில் இருந்த Prathipat Masakul என்ற நபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நார் தவறுதலாக விமான ஓடுபாதையில் காரை ஓட்டிச்சென்றதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த நபரின் காரை சோதனை செய்தபோது, அவரது காரில் போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement