லெக்கின்ஸ் அணிந்த மனைவியின் காலை அடித்து உடைத்த கணவர்

man broken his wife leg for leggins


man-broken-his-wife-leg-for-leggins

பாம்பு போன்றே தோற்றமளிக்கக்கூடிய லெக்கின்ஸ் அணிந்து கணவருக்கு ஆச்சர்யம் கொடுக்கக் காத்திருந்த மனைவியை, உண்மைப் பாம்பு என நினைத்து காலை அடித்து உடைத்துள்ளார் கணவர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் பாம்பு தோல் போன்றதொரு புதிய லெக்கின்ஸ் வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய லெக்கின்ஸை அணிந்து பாம்பு போல நடித்து கணவரை பயமுறுத்த எண்ணியுள்ளார் அந்த மனைவி.

ஆனால், அன்று அலுவலகம் முடிந்து கணவர் காலதாமதமாக வீடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்காக காத்திருந்த மனைவி தன்னை அறியாமலே உறங்கிவிட்டிருந்தார். அவர் போர்வையை பாதி உடம்பு மறையும் அளவிற்கும் கால்கள் வெளியில் தெரியும்படியும் படுத்துள்ளார்.

australia

இரவு நேரம் கழித்தே வீட்டுக்கு வந்த கணவர் தன்னுடைய மனைவி தூங்கிக்கொண்டிருப்பதையும் மனைவியின் கால்களுக்கு கீழ் இரண்டு பாம்புகள் கிடப்பதாக எண்ணி மனைவியில் காலை கட்டையால் தாக்கியுள்ளார்.

அலறி எழுந்த மனைவி பாம்பைக் கண்டு தான் அலறுகிறார் என எண்ணிய கணவர் மேலும் விடாமல் அவரது காலில் அடித்துள்ளார். அதன் பின்னர் அது பாம்பு அல்ல தன்னுடைய கால் தான் என மனைவி காட்டியவுடன் அதிர்ந்த கணவர் மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடுமையாகத் தாக்கப்பட்டு கால்கள் முறிந்த நிலையில் அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.