உலகம் லைப் ஸ்டைல் Covid-19

இறப்பதற்கு முன் ஏதோ கூறவந்த இத்தாலி பெண் மருத்துவர்..! கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

Male nurse killed girlfriend she saying she infected him

தன்னை அறியாமலையே தனக்கு கொரோனா வைரஸ் பரப்பியதாக கூறிய காதலியை, காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சோக சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள அணைத்து நாடுகளும் போராடிவருகிறது. இதில், இத்தாலி நாடு அதிகமான உயிர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த நாட்டில் மேலும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. இத்தாலியை சேர்ந்த அந்தோனியா என்ற ஆண் செவிலியரும், குவாரண்டினா என்ற பெண் மருத்துவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது இத்தாலியில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நான் எனது காதலி குவாரண்டினாவை கொலை செய்துவிட்டதாக அந்தோனியா போலீசாருக்கு போன் செய்து கூறியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குவாரண்டினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, அந்தோனியாவை கைது செய்து விசாரித்தனர்.

அதில், தன்னை அறியாமளையே உனக்கும் கொரோனா வைரஸை நான் பரப்பிவிட்டேன் என குவாரண்டினா தன்னிடம் கூறியதாகவும், ஏற்கனவே கொரோனா பயத்தில் இருந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன், அவர் இறக்கும் சில நிமிடத்திற்கு முன் கூட ஏதோ கூற வந்தார். ஆனால், அதற்கு அனுமதி வழங்காமல் நான் அவரை கொலை செய்துவிட்டேன் என அந்தோனியா கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்தோனியா, குவாரண்டினா இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பட்டு செய்தனர். பரிசோதனையின் முடிவில், யாருமே எதிர்பாராதவகையில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இருவருக்குமே கொரோனா தொற்று இல்லை என ஆய்வு முடிவுகள் வந்திருந்தது.

கடைசியாக பேச முயன்ற காதலிக்கு வாய்ப்பு கொடுக்காமல், இப்படி அவசர பட்டு நடந்துகொண்டதை நினைத்து அந்தோனியா ஒரு புறம் வருத்தப்பட, அந்தோனியாவின் அவசர புத்தி, இளம் மருத்துவரின் மரணம் குறித்து அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


Advertisement