குறைந்துபோன மனிதர்களின் நடமாட்டம்..! சாலைக்கே வந்து ஜாலியாக உறங்கும் சிங்கங்கள்.! வைரல் புகைப்படம்.

குறைந்துபோன மனிதர்களின் நடமாட்டம்..! சாலைக்கே வந்து ஜாலியாக உறங்கும் சிங்கங்கள்.! வைரல் புகைப்படம்.



Lions sleeping at road side photos goes viral

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. அதேநேரம் கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில் உள்ள சில சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாக படுத்து உறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

க்ரூகர் தேசியப் பூங்காவின் ரேஞ்சரான ரிச்சர்ட் சோவ்ரி என்பவர் கடந்த வாரம் வழக்கமான ரோந்து பணிக்காக சென்றபோது சிங்கங்கள் ஜாலியாக சாலையில் படுத்துறங்குவதை பார்த்ததும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.