அடேங்கப்பா! 126 மணி நேரம் நடனமாடி இளம்பெண் கின்னஸ் சாதனை; வைரலாகும் வீடியோ.!kinnas record dance - nepal girl bandhana- viral video

இந்த உலகத்தில் தோன்றிய நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாகவே இருக்கும். ஆனால் கின்னஸ் சாதனை, உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் அரிதாகவே சிலருக்கு தோன்றுகிறது.

அவ்வாறான எண்ணம் தோன்றினாலும் இறுதிவரை முயற்சி செய்து வெற்றிக் கனியை ருசிக்க கொடுத்து வைத்துள்ள யோகம் ஒரு சிலருக்கு தான் அதுவும் அரிதாகவே நிகழ்கிறது. ஏனெனில் முயற்சிகள் பல வேளைகளில் தோல்வியில் முடிகின்றன. சராசரி மனித வாழ்க்கையில் தங்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்வதே ஒரு சாதனையாகத்தான் உள்ளது.

இந்நிலையில் நேபால நாட்டை சேர்ந்த 18 வயதான பந்தனா என்ற பெண் தொடர்ந்து 126 மணி நேரம் டான்ஸ் அடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். "தனி நபர் டான்ஸ் மாராத்தான்" என்ற பிரிவில் அதிக நேரம் டான்ஸ் ஆடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

இதற்கு முன்னர் இதே பிரிவில் கேரளாவை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கடந்த 2011ம் ஆண்டு தொடர்ந்து 123 மணி நேரம் 15 நிமிடம் டான்ஸ் ஆடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதே சாதனையாக கருதப்பட்டது. தற்போது பந்தனா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.