தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
திக்., திக்., திக்..! ஜப்பான் பிரதமர் இல்லத்தில் பேயா?.. பிரதமர் சுவாரசிய பதில்..!
ஜப்பான் நாட்டில் கடந்த 1963 ஆம் வருடம் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், மந்திரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை சரமாரியாக சுட்டு கொலை செய்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்துவந்தது.
இதனால், அடுத்தடுத்து பிரதமராக பொறுப்பேற்ற பலரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் தங்குவதை தவிர்த்து வந்தனர். கடந்த 8 வருடமாக பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, அவரைத்தொடர்ந்து ஒருவருடம் பிரதமர் பொறுப்பில் இருந்த யோஷிஹய்ட் சுகா ஆகியோரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கவில்லை.
இந்த நிலையில், கடந்த அக். மாதம் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பூமியோ கிஷிடோவிடம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில், அதனையும் மீறி நேற்று அங்கு குடிபெயர்ந்துள்ளார். முதல் நாள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருந்தது குறித்து அவர் அளித்த பேட்டியில், "நான் நேற்று நன்றாக உறங்கினேன். பேய்கள் எதையும் பார்க்கவில்லை" என்று கிண்டல் செய்வது போல் பதில் அளித்தார்.