கால் பண்ணியே கடுப்பேற்றிய கணவன்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி காரணம்.!
தனக்கு அதிகப்படியான செல்போன் அழைப்புகள் வருவதாக கூறி போலீசில் புகார் கொடுத்த ஒரு பெண்ணுக்கு விசாரணையில் பெரும் அதிர்ச்சியை காத்திருந்தது.
ஒரே நாளில் 100 கால்கள் :
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு நாளைக்கு 100 முறைக்கும் ஏற்பட்ட அழைப்புகளை தனது செல்போனில் பெறுவதாகவும், இந்த அழைப்புகளானது வெவ்வேறு நம்பர்களில் இருந்து வருவதாகவும், அழைப்பை ஏற்ற பின்னர் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விடுகிறார்கள் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது செல்போன் எண்ணை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
கணவர் மீது சந்தேகம்
மேலும் அந்தப் பெண்ணும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க தொடங்கியுள்ளார். கணவர் தன்னுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன் அழைப்புகள் எதுவும் வருவதில்லை என்பதை அவர் கவனித்துள்ளார். வீட்டில் இருக்கும் போது சில நேரங்களில் அழைப்புகள் வந்தாலும், கணவரின் செல்போனை தான் கையில் வைத்திருக்கும் போது போன் வராமல் இருப்பதை அவர் கவனித்துள்ளார்.
தீவிர காதல்
தனது சந்தேகத்தை அவர் காவல் நிலையத்தில் தெரிவித்து இருந்த நிலையில் போலீசார் கணவரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட கால்களை ஒரே நாளில் செய்தவர் கணவர் தான் என்பது தெரியவந்துள்ளது. தனது மனைவியை தான் அதிகமாக காதல் செய்வதாகவும் அவர் வேறு தொடர்புகளை வைத்துக்கொண்டு என்னை விட்டு சென்று விட்டால் என்ன செய்வது என்பது தெரியாமல் பொறாமையின் காரணமாக இப்படி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.