கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு! அதிரடியாக ஹாலிவுட் ஸ்டார் ஜாக்கிஜான் விடுத்த முக்கிய அறிவிப்பு!



jackie jhan announcement about coronovirus medicine

சீனாவில் வுஹான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 25 மேற்பட்ட நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் 814க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உலகளவில் 37000க்கும் அதிகமான பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் கொரோனா வைரஸ்க்கு  இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதன் சிகிச்சைக்காக அவசரஅவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கியுள்ளது. 

jackie john

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிஜான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த கொடூர வைரஸை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒருமாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். 

இவ்வாறு தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாகக் கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழவேண்டும் அதற்காகத்தான் என கூறியுள்ளார்.