ராஜ்குமார், சிவாஜி, கமல், ரஜினி, ஜெமினி உட்பட பலருடன் நடித்த, பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்..!
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்; சிரியாவின் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..! 3 மூன்று பேர் காயம்..!
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்; சிரியாவின் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..! 3 மூன்று பேர் காயம்..!

இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், சிரியாவை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் செய்து வருகின்றனர். கடந்த 2011-வருடத்திலிருந்து நடந்து வரும் இந்த போரால் அந்த நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் இருக்கும் ராணுவ விமானதளத்தை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சனா நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் ஆதரவு போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்றும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.