செங்குத்தான கம்பி..! இளம் பெண்ணின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து தோள்பட்டை வழியாக வெளியே வந்த சம்பவம்.!
செங்குத்தான கம்பி..! இளம் பெண்ணின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து தோள்பட்டை வழியாக வெளியே வந்த சம்பவம்.!

கட்டுமானப் பணியின் போது பெண் ஒருவர் கால் தவறிக் கீழே விழுந்த போது கீழே இருந்த கம்பி ஒன்று அவரது பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து தோள்பட்டை வழியாக வெளியே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கட்டுமான பணியின்போது சியாங் என்ற பெண் 10 அடி உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது கீழே செங்குத்தாக நீட்டிக் கொண்டிருந்த கம்பி ஒன்று அந்தப் பெண்ணின் பின்புறம் வழியாக அவரது உடலுக்குள் நுழைந்து தோள்பட்டை வழியாக வெளியே வந்துள்ளது.
வலியால் அலறி துடித்த அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கம்பியை அறுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அந்த பெண்ணின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்து பார்த்தபோது உள்ளே நுழைந்த கம்பி அந்த பெண்ணின் உடல் உறுப்புகளிலோ அல்லது இரத்த குழாய்களிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
உடனே அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்ணின் உடலில் இருந்து கம்பி முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இவ்வளவு பெரிய கம்பி அந்த பெண்ணின் உடலுக்குள் நுழைந்து வெளியே வந்த நிலையிலும் எந்த ஒரு உடல் உறுப்பு சேதமும் இல்லாமல் அந்தப் பெண் உயிர் பிழைத்தது மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.