9 வயதில் இனி திருமணம் செய்யலாம்; ஈராக்கில் அமலான சட்டம்.. அதிர்ச்சியில் மக்கள்.!



Iraq Marriage Bill 2025 

 

மேற்காசியாவில் இருக்கும் ஈராக் நாட்டில், பெரும்பாண்மையான ஷியா முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அங்கு முஸ்லீம் சட்டப்படி ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் பிரதமராக மும்மது ஷியா அல் சூடானி பதவி வகிக்கிறார். ஈராக் நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. 

குழந்தை திருமணம்:
அதனை மீறி செயல்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனையும் விதிக்கப்படும். அந்நாட்டில் உள்ள பெண்களின் திருமண வயது என்பது 18 ஆக இருந்தது. கடந்த 1950 ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது. எனினும், அங்குள்ள பெண்களில் 28 விழுக்காடு நபர்கள், 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துகொள்வதாக ஐநா தெரிவித்தது. 

இதையும் படிங்க: #Breaking: குவைத்தில் 2 தமிழர்கள் உட்பட 3 பேர் மரணம்; குளிருக்கு தீ மூட்டி, கரும்புகையால் சோகம்.!

World news

திருமண வயது குறைப்பு

இந்நிலையில், ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18ல் இருந்து 9 ஆக குறியாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசயத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் 9 வயது முதல் அங்கு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும்.  

இதையும் படிங்க: துருக்கி ரிசார்ட்டில் பயங்கர தீ விபத்து; 66 பேர் உடல் கருகி மரணம்.!