உலகம்

பழிவாங்கியது ஈரான்! அமெரிக்காவின் விமான தளம் காலி! சீறி பாய்ந்த ஏவுகணைகள்! ஷாக் வீடியோ.!

Summary:

iran attack on america


அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி, துணைத் தலைவர் அ‌பு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஈரான் ராணுவத்தை மேலும் கோபத்தை அதிகரித்தது. இந்நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.


 இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இத்தாக்குதலில் எந்தளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க அமைச்சர் ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சுலைமானி மரணத்திற்கான பழிக்கு பழி வாங்கும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. 

 


Advertisement