பெண் கர்ப்பமான ஒருமணிநேரத்தில் குழந்தையை பெற்றெடுத்தாள்..! அதிர்ச்சியில் மக்கள்.! மருத்துவர் கொடுத்த விளக்கம்..!

பெண் கர்ப்பமான ஒருமணிநேரத்தில் குழந்தையை பெற்றெடுத்தாள்..! அதிர்ச்சியில் மக்கள்.! மருத்துவர் கொடுத்த விளக்கம்..!



indonesia-woman-delivers-baby-within-1-hour-after-pregn

இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த 1 மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள தாசிக்மலயா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹெனி நூரேனி (வயது 28). இவருக்கு திருமணம் முடிந்து ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்த ஒரு மணிநேரத்திற்குள் இவருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண், நான் வீட்டில் இருந்தபோது திடீரென எனது வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன. ஒருவேளை நான் கர்ப்பமாக உள்ளேனா என சந்தேகம் வந்தது. இதனை அடுத்து நான் எனது தந்தையின் வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.

Mysterious

அங்கு சென்ற சிறிதுநேரத்தில் பிரசவவலி போல் எனது உடலில் வலியை உணர்ந்தேன். இதையடுத்து, நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம். பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை பிறந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் தனக்கு தவறாமல் மாதவிடாய் ஏற்பட்டதாகவும், குழந்தை பிறகும் சில மணி நேரத்திற்கு முன்புகூட இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறும் அந்த பெண், இதுவரை ஒருமுறைகூட தான் கர்ப்பமாக இருப்பதாக அறிகுறிகள், வலி எதுவும் தோன்றவில்லை எனவும், குழந்தை பிறக்கும்வரை தான் கர்ப்பமாக இருப்பதே தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்த தகவல் உலகம் முழுவதும் வைரலானநிலையில், பண்டுங் ஹசன் சாதிகின் மருத்துவமனைமகப்பேறு நிபுணர் டாக்டர் ருஷ்வானா அன்வர் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். 25,000 பிரசவங்களில் ஒருவருக்கு இது போன்று நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் இதுபோன்று நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்த பெண் திடீரென எடையை குறைந்திருந்தாலும் வயிற்றில் குழந்தை இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண்  மற்றும் அவருக்கு பிறந்துள்ள ஆண் குழந்தை இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.