எதிரிகிக்கூட இப்படி ஒரு மரணம் வரக்கூடாது.. எதார்த்தமாக போட்ட பதிவு அப்படியே நடந்து போச்சு..



Indonesia flight crash sad moments

இந்தோனேசியா விமானவிபத்திற்கு முன் அதில் பயணம் செய்த பெண் ஒருவர் பதிவிட்ட சமூகவலைத்தள பதிவு தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-500 ரக (எஸ்.ஜே.182) விமானம் சமீபத்தில் வானில் இருந்து திடீரென மாயமாகி. பின் கடலில் விழுந்து விபத்துக்குளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 7 சிறுவர்கள், மூன்று குழந்தைகள், 12 விமானப் பணியாளர்கள் உட்பட 62 பயணிகள் பயணித்திருக்கிறார்கள்.

Fliight accident

இதில் Ratih Windania என்ற பெண்ணும் ஒருவர். இவர் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக தனது 2 குழந்தைகளுடன் ஜகார்த்தாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில்தான் விடுமுறை முடிந்து தனது குழந்தைகளுடன் விமானத்தில் புறப்பட்டு சொந்த ஊரான போன்டியனாக் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் விமான பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக தனது குழந்தைகளுடன் அழகாக சிரித்தபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அந்த பதிவில் "Bye, Bye Family" எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது தாய் வீட்டில் இருந்து தனது குடும்பத்தினருக்கு Bye Bye சொல்லிடவிட்டு சென்ற அவருக்கு, தாம் இந்த உலகைவிட்டே செல்லப்போகிறோம் என்பது அப்போது தெரியவில்லை.

Fliight accident

இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் கூறும்போது, எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது எனவும், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதாக ஏதோ ஒரு மூலையில் சிறிய நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ள அவர் தமது குடும்பத்திற்காக ஜெபியுங்கள் என கண்ணீர்மல்க கேட்டுக்கொண்டார்.