மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள்.. கரைக்குவந்து வலையை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்..

மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள்.. கரைக்குவந்து வலையை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்..



human-faced-white-shark-found-near-indonesia

மனித முகத்துடன் கண்டறியப்பட்ட வெள்ளை சுறா ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இணையதள வளர்ச்சிக்கு பிறகு உலகின் எந்த ஒரு இடத்தில் நடைபெறும் வினோதமான சம்பவங்களும் உடனே இணையம் மூலம் உலகம் முழுவதும் வைரலாக தொடங்கிவிடுகிறது. அதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம்தான் இது. இந்தோனேஷியாவின் கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதிக்கு மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

வலையை வீசி, மீன்கள் சிக்கியபிறகு மீண்டும் கரைக்கு திரும்பிய மீனவர்கள், தங்கள் வலையில் சிக்கிய மீன்களை வலையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் தங்கள் வலையில் சிக்கி இருந்த, அந்த விசித்திரமான வெள்ளை சுறாவை பார்த்துள்ளனர்.

White sura

மனித முகத்துடன், குட்டியான உருவத்துடன் இருந்த அந்த வெள்ளை சுறாவை பார்த்ததும் அவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். ஆனால் அந்த சுறா கரைக்கு வந்ததும் இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த வெள்ளைச் சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வெள்ளை சுறாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.