உலகம் சமூகம் ஆன்மிகம்

நியூயார்க்கில் காவி உடையுடன் நடந்து சென்ற இந்துமத துறவிக்கு நடந்த கொடூர சம்பவம்!

Summary:

Hindu priest attacked at Newyork

அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் காவி நிற உடையுடன் நடந்து சென்ற இந்து மதத் துறவி ஒருவரை 52 வயது முதியவர் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.

சுவாமி ஹரிஸ்சந்தர் பூரி என்பவர் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ப்ளோரல் பார்க் அருகே நடந்து சென்றுள்ளார். அதன் அருகே சிவசக்தி பீத் என்ற இந்து மத கோவிலும் உள்ளது.

சம்பவத்தன்று அந்த இந்து மதத் துறவி காவி உடையை அணிந்துகொண்டு வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த 52 வயது முதியவர் ஒருவர் துறவியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் துறவியின் தலை மற்றும் கை கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.


Advertisement